கிறுக்கல்கள் ஓவியங்கள் ஆகும் உன்னால்
அங்கங்கே திட்டுத் திட்டாய் சில வண்ணங்களும்,
திட்டு வாங்கும் குழந்தையின் குறும்புகளும்,
தொட்டு வரைந்த ஓவியம் ஒன்றை கண்டேன்..
அவ்வோவியம் கோபத்துடன் பேச முர்ப்பட்டது
என்னிடத்தில்...
"நீ ரசனையற்றவன் " என்று...
புன்னகைத்தபடியே என் மனதுக்குள்
முனகிகொண்டேன்....
" உன்னோடு சேர்த்து வைத்துக் கேட்டால் " எப்படி பொய்யுறைப்பேன் நான்....