தலைக்கனம்

ஆண்டான் என்றும்
அடிமை என்றும்
அகிலத்தில் எவருமில்லை
இன்னுயிர் இப்போது போகலாம்
எப்போதும் போகலாம்
தான் வைப்பதே சட்டம்
தான் வைப்பதே கொள்கை என
தலைக்கனம் பீடித்த
களைக்கொல்லிகளை
வேண்டாமென துச்சமாக
தூக்கி எறிந்திடுவோம்
விட்டுக் கொடுப்பவர்கள்
கெட்டுப் போவதில்லை
கெட்டுப் போகிறவர்கள்
விட்டுப் போவதில்லை
தலைமை கிரீடம் சூட
தன்னடக்கம் வேண்டும்
நரி ஆண்டாலென்ன
நாட்டாமை ஆனாலென்ன
நகைச்சுவைதான்
ஆஆஆ சிரித்து வைப்போம்
சிறு நரிகளெல்லாம்
சீறும் சிங்கங்கள்ஆகாது
கர்ஜித்துக் கொள்ளட்டும்
விட்டுக் கொடுப்போம்
உறவுகளை தக்கவைத்துக்கொள்ள
ஆடி வந்து விட்டது
ஆடித்தான் பார்க்கட்டுமே!!!!
சண்டைகள் நிரந்தர தீர்வுகளல்ல
அவணியில் பிறந்து விட்டோம்
அக்னியில் மூழ்கித்தான் பார்ப்போமே
காமராஜர் பிறந்த நாடு
அப்துல்கலாம் பிறந்த நாடு
செதுக்கி வைப்போம்
மாணவர் புத்தத பக்கத்தில்
வெறும் எழுத்துக்களாய்!!!!!

எழுதியவர் : உமாபாரதி (20-Oct-18, 11:10 pm)
சேர்த்தது : உமாமகேஸ்வரி ச க
Tanglish : thalaikkanam
பார்வை : 236

மேலே