நீ ஒரு காதல் கஸல் ரோஜாவின் தூவல்

நீ ஒரு அழகிய காதல் கஸல்
உன் இதயம் எனக்கு தென்றலின் வாசல்

கவிந்திடும் விழிகளில் மாலையின் சாயல்
குவிந்திடும் இதழ்களில் செவ்வானத்தின் சிதறல். (நீ ஒரு.....)

நடந்திடும் அழகினில் நீ நதிக்கரை நாணல்
நீ நடந்த பாதையில் ரோஜாக்களின் தூவல். (நீ ஒரு....)

பார்க்கும் பார்வையில் பனித்துளிச் சாரல்
பாராமல் நீ போனால் எனக்கு பாலை வேனல். (நீ ஒரு....)

உன் அழகினை ரசித்து சமர்ப்பித்தேன் சாரலன் பாடல்
என் கஸல் எல்லாம் உன் காதலின் தேடல் ! (நீ ஒரு....)

--உருதுக் கஸல் வழியைப் பின்பற்றித் தமிழில் எழுதிய கஸல்
தீபாவளி NAZRANA

------கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Nov-18, 6:35 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 32
மேலே