சிவ வர்ணனை
சிவ வர்ணனை
**************************************
நிலமோ திருநீறாய் நீர்கங்கை ஆறாய்
ஒளிரும் நெருப்போ விழிமூன்றாய் -- விலகா
உடுக்கை இசைக்காற்றாய் ஓங்குசடை வானாய்
உடுத்தாய் ஐம்பூத உடுப்பு !