சிவ விளையாடல்

சிவ விளையாடல்
****************************************

தண்சுமந்த தாய்க்கிடம் தந்தவனே தன்பிறவிப்
புண்சுமந்து நொந்து புலம்பிய பொன்வாசன்
பண்சுமக்கக் கயிலைப் படியிறங்கிக் கூடலில்
மண்சுமக்கப் போவாயோ மகிழ்ந்து !

ஆற்றொணா அன்பர் துயர்தனை அன்றொருநாள்
மாற்றவே மண்ணிறங்கி ஆடினீர் ! -- ஆற்றொடுக்கக்
கூடல் கரையிட்ட கூத்தனே நின் விளை
யாடல் குறைகூறுவோர் யாரோ ?

அடித்தாரே உன்னை அடியோ அவர்மேல்
படித்தாரே பாடம் பயனில் உலகோர்
அடிக்கும் அடிதாங்க ஆற்றேன்நான் அய்யா
துடிக்கும் எனக்கு நீயேதுணை !

எழுதியவர் : சக்கரைவாசன் (10-Nov-18, 8:32 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 45

மேலே