என் நண்பர்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
பிறர்போலி தான்கண்டு தன்போலி பிறரறியாது பிதற்றும்
என்போலி நண்பன் உனக்கும் நான் நண்பன்.
காரியக் கால்கழுவி கணக்குப் போட்டுக் கைவிரிக்கும்
கூரிய குற்றுவாள் கொண்டவன் உனக்கும் நான் நண்பன்.
வாழைத்தோலும் சீப்பும் தோல்விகாணும் வாரிவிடும்
கலைத்தொழிலில் சிறந்தவன் உனக்கும் நான் நண்பன்.
பகையென நான் விலகியிருந்த பாவிகளுடன் உறவாடி
சிகையென எனைமதிக்கும் உனக்கும் நான் நண்பன்.
பட்ட துன்பம் தாளாமல் பரிதவித்து நிற்கையில்
எட்டிப் பார்க்கா எலுவன் உனக்கும் நான் நண்பன்.
தோல்விக் கணைகளைத் தோரணமாய் அணிந்த போதிலும்
தனிமையில் தவிக்க விட்டவன் உனக்கும் நான் நண்பன்.
கண்ணகியாய் நான் கண்ணீர் விடுவதைக் கண்டும் காணாது
மாதவியுடன் மகிழ்பவன் உனக்கும் நான் நண்பன்.
திறமை எனக்கிருந்தும் வெளிப்பட்டால் வெற்றி பெறுவேனென
சிறுமை யுரைத்து சிரிப்பவன் உனக்கும் நான் நண்பன்.
Attachments area