பாராமல் போகின்றவளே
பாசத்தை பொழிந்து
பாராமல் போகின்றவளே
அனலிடைப் பட்ட புழுவைப் போல
துடிக்க வைப்பதும் ஏனோ
நீ ஏன் அவ்வளவு வருந்துகிறாய்
இன்று நடந்தெதுவும்
உனக்கு நடந்ததேயல்ல
அவமதிப்புகளோ
துரோகங்களோ
அற்புதங்கள் போல
அவை நிகழ்வதில்லை
அன்றாடம்
எப்போதும் நிகழ்ந்து
கொண்டிருக்கின்றன
எதிர்பாராத சில குழப்பங்கள்
சின்னஞ் சிறு மறதிகள்
நாம்
மன்னிக்கக் கூடியவர்கள்
என்பதால்
மன்னிக்கக்கூடிய தவறுகள்
கடந்த காலங்களுக்காக
எதிர் காலங்களை
அடகு வைத்து விடாதே!!!!!