அவளின் கருவறையே அழகு
காலங்கள் தோறும்
எழுதாத ஓவியம் நீ
மட்டும் தான் அம்மா•••••••
காவியங்கள் எழுத மறந்த
எழுதாத எழுத்துக்கள் நீ
மட்டும் தான் அம்மா••••••••
கவலைகள் இல்லாமல்
உன் கருவறையில்
வாழும் எனக்கு கவிதை எழுத
கொடுத்ததுக்கு நன்றி தாயே••••••••
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••
இதோ உனக்கா!
அழகியக் கலைக்கூடமே
உன் கருவறை தான்
என் உயிர் தொடக்கத்தின்
துவக்க புள்ளி நீ தான் அம்மா
தாயே நான் கேட்டு ரசித்த முதல்
இதய துடிப்பு உன்னுடையதம்மா
காற்றே இல்லாமல்
சுவாசித்துக்கொண்டு இருக்கிறேன்
உன் கருவறையில் தான் அம்மா
இருட்டு அறைக்குள்
சத்தம் இல்லாத அமைதியான
உறங்க உன் கருவறை கிடைத்தம்மா
நேரத்திற்கு உன்ன உணவு
உன் கருவறையில் கிடைத்தம்மா
உடைகளும் தேவையில்லை
உன் கருவறை உடை மட்டும்
இருந்தால் போதும் அம்மா
இந்த கருவறை உலகம் போதுமம்மா
இதமாய் தானே இருக்கிறேன் அம்மா
இரவு பகல் இரண்டுமே
ஒன்றான ஓர் உலகம்
உன் கருவறையில்
மட்டும் தான் அம்மா
கள்ளம் கபடம் இன்றி
கண்மூடி உறங்கும்
காரிருள் நிறைந்த
ஓர் உலகம் உன் கருவறை
மட்டும் தான் அம்மா
மறு படி எனக்குக் கருவறைத் தருவாயா அம்மா
••••••••••••••••••••••••••••••••••••••••
கற்பனைக்களுக்கும் அப்பாற்
பட்டவை என்னை சுமந்த
தாயின்கருவறை
#அம்மா#
இதயம் கலந்த நிலவுகள்