கண்ணனோ
இளகிய இதயம்
அவனுள் கண்டேன்
இமைத்திடும் பொழுதினில்
இழைத்திடும் அவன் செயல்
அடுத்தவன் கவரும் எண்ணம் சிறிதும் இல்லா
சிந்தனையாளன் அவன்
காதல் கொண்டால் கன்னிக்கு யோகம்
அவள் இம்மையில் ராணி
இன்பமும் இளமையும் இனிமையின் பேச்சும்
அவனுக்கே உடையது
வண்டுகள் தான் மலரிடம் செல்லும்
இம்முறை மாறி மலர்கள்
தாவும் வண்டென இவன்
கார்முகில் கண்ட மயிலென கன்னிகள்
இன்பத்தில் துவள இளமைகள் துள்ள
ஆனந்த மிகுதியில் ஆடலும் பாடலும்,
ஆண்மகன் அவனோ....
கன்னிகள் வலையில் சிக்கிய நிலையில்
புன்னகை ஒன்றினை பகிர்ந்தளித்தான்
கண்ணனோ இவன் கண்ணனோ