காதல்
வஞ்சிக்கொடி அவள்
மெல்ல மெல்ல நடந்துவந்தாள்
உயிர்க்கொண்ட ஓவியம்
நடந்து வருவதுபோல அந்நடையில்
அன்னத்தின் சாயல் கண்டேன் நான்
மலரின் மென்மை கண்டேன் நான் அவள் மேனியில் ,
அன்னம்போல் நடை அவள் நடை என்றால்,
தாயின் மடி மீது நடப்பதுபோல்
கன்னி அவள் கடுகளவும் பாரம் தாராது
பூமியின்மேல் கால்கள் பதித்து
நடந்து வந்தாள், பெண்மையின் இலக்கணமதுவாய்,
அந்திமாலை வானம்போல் சிவந்திருந்தது
அவள் சுந்தர வதனம் அந்த மஞ்சள் சிவப்பில்
தனித்திருந்து அழகு தந்தது அவள்
பிறை நெற்றியில் வைத்த குங்குமப்பொட்டு,
என்னைப்பார்த்து நாணம் ரத்த ஓட்டத்தில் எற,
கன்னி அவள் நாணினால், கோணினாள்
வலக்கால் கட்டை விரலால் மண்ணில்
ஏதோ கோலம் வரைந்தாள் என்று நினைத்த நான்
அவளருகில் சென்றேன் அவள் தலை இன்னும் நாணத்தால்
தரையையே நோக்கி இருக்க,அவள் வரைந்த
கோலத்தைப் பார்த்தேன் அது கோலமல்ல
அவள் தன உள்ளத்தை அல்லவோ வரைந்திருந்தாள் அங்கு
ஆம், ' என்னவனே , உனக்காகவே பிறந்தவள் நான் '
என்னை ஏற்றுக்கொள்வாயா...' என்று
எழுதி இருந்தாள், அநத நான் கண்ட என்
நூதன காதலி ........ அதை கண்டுகொண்டு நான்
அவள் மலர் கையை மெல்ல தொட அவள்
தன தலையை மெல்ல உயர்த்த ....மெல்ல உயர்த்த
கண்ணும் கண்ணும் கலந்ததுவே அச்சங்கமத்தில்
பார்வையின் சங்கமத்தில் உதித்தது எங்கள் காதல்.