பிரியமான பிரிவு

பிரிவு என்பது வலியை
மட்டுமின்றி
ஒரு அழகான
உறவையும் தந்நது....
என் முதல் பிரிவு,
அவளின் கருவறை விட்டு
அவள் மகிழ்ச்சி கலந்த கண்ணிரில்
மிதக்கும் போது
நான் இவ்வுலகம் வந்தது தான்....

மெல்ல மெல்ல நானும் வளர
பிடிக்காமல் பள்ளி போக
விரல் பிடித்து நடந்த
தந்தையின் கைவிரல்
பிரிந்து செல்லும் போது,
கதறி அழும் பிரிவு
இன்று நினைக்கும் போது
சிரிப்பில் மிதக்கிறது...

குட்டி குட்டி சண்டையிட்டு
செல்லமான கோபத்தில்
உடன்பிறப்புடன் பேசாமல் இருக்கும்
ஓரிரு நாள் பிரிவு அழகானது....

சிறுசிறு செயலுக்கெல்லாம்
காரணமின்றி கோபம் கொண்டு
பாரத்தும் பார்க்காமல் போல்
நடிக்கும்
நண்பர்களின் பொய்யான பிரிவு அழகானது...

அன்பு கலந்த இந்த பிரிவு
அழகான பிரிவு...
இந்த பிரிவை நேசிக்கும்
பிரியமானவளாய்
"நான்"....

எழுதியவர் : Deepikasukkiriappan (11-Dec-18, 9:40 am)
Tanglish : piriyamaana pirivu
பார்வை : 1512

மேலே