மோதிவிளையாடு
முட்டி விளையாடு
மோதி விளையாடு
குட்டி விளையாடு
ஒருபோதும்
பொறாமையைத் தொட்டு
விளையாடாதே ////
கட்டி விளையாடு
பிடித்து விளையாடு
ஓடி விளையாடு
ஒருபோதும் ஏற்ற தாழ்வு
பார்த்து விளையாடாதே..//
உறவாக எண்ணி விளையாடு
உரிமையோடு விளையாடு
உள்ளத்தில் உறுதியோடு விளையாடு
உதாசீனப் படுத்தி விளையாடாதே //
வேகமாய் விளையாடு
விவேகமாய் விளையாடு
வெற்றி வாகை சூடி விளையாடு
விரும்பியே விளையாடு
விரோதம் வளர்த்து விளையாடாதே.//
வீரனோடு மோதி விளையாடு
வீட்டுக்கும் நாட்டுக்கும் புகழ்
தேடும் நோக்கில் விளையாடு
அகந்தையை விரட்டி நல்லதோர்
மனிதனாய் நீ முன்னேறி விளையாடு.///