எழுந்துவா தமிழாகாஜா புயலின் கோர தாண்டவத்திலிருந்து மீண்டு வரும் தமிழரகளுக்கு இக்கவிதை சமர்ப்பணம்
இயற்கையின் சீற்றம்
இதுவென நினைத்து
எழுந்துவா தமிழா...
உடமை உதிர்ந்தாலும்
உறவு பிரிந்தாலும்
உறுதி உனக்குண்டு தமிழா
உழைத்த உன் கரம்
சோம்பிக்கடக்க..
ஒருபோதும் விட்டுவிடாதே தமிழா.
மீண்டும் புறப்படு
மீட்க விரைந்திடு
எழுந்துவா தமிழா
மனதில் உறுதி உனக்குண்டு
மழை வெள்ளம் புயல் கண்டு
நடுங்கி ஒடுங்கிட
நீ...கோழை இல்லை தமிழா
எழுந்துவா தமிழா
சாதிமத பேதமின்றி
சாதனை பல புரிந்த உனக்கு
இந்த இயற்கையின் சீற்றம்
புதிதல்ல தமிழா
எழுந்து வா தமிழா
அத்தனை வழிகள்
அடைத்து நின்றாலும்
ஒற்றை ஒளியாய்
உன்னில் கிடக்குது
நம்பிக்கை கிடங்கு ..
அது ...யானையின்
பலமிகுந்த தும்பிக்கையைவிட
பன்மடங்கு.!
எழுந்துவா தமிழா
தோள்கொடுக்க ஆயிரமாயிரம்
தோழமை உனக்குண்டு தமிழா
உணதுழைப்பின் உண்மை புரிந்து
ஊர்போற்றும்
உத்தம தமிழா !
எழுந்துவா தமிழா ..
ஆயிரம் கஜா அடிக்கடி வந்தாலும்
ஆணையிட்டு சொல் ..
என் மன உறுதி என்றுமே
உன்னிடம் மண்டியிடாதென்று ,,,!
உரக்க சொல் தமிழா ..இனி
விடியல் உன் வசமே ..
எழுந்துவா தமிழா
எழுச்சிமிகு தமிழா ....!!!
.