வெற்றி படி
பேரன்பு மிக்க தோழமைகளுக்கு
அடியனின் முகவரிகள்
அனைவருக்கும்
பொதுவாகத்தான்
ஒவ்வொரு நாளும்
மலர்கிறது
அனைவரது கனவும்
நிறைவாய் விடிகிறது
எல்லோராலும் முடியும்
துணிந்து எதையும் எதிர்கொண்டால்...!
இனிய உதயம்
ஒவ்வொரு நாளும்
கிழக்கில் மலரும்
விழித்து எழுந்தால்
வாழ்க்கை விடியும்
புன்னகை சிந்திப்பார்
இதயம் கனியும்!
எண்ணப்படிதான்
வாழ்க்கை அமையும்
ஆதலால்....படி
ஒவ்வொரு நொடியும்
இரசித்து மகிழ்
உறுதியாய் செயல்பட்டு
ஒவ்வொரு நாளையும்
ஒளிமயமாக்கு
படிப்படியாக உயர்ந்து
வாய்ப்புகளை எட்டிப்பிடி
இறுதிப்படிமீது ஏறி நின்று
ஒவ்வொருவரும்
அசைக்க வேண்டும்
வெற்றிக்கொடி!
நேற்று
இன்றாகாது
இன்று போல்
நாளை அமையாது
கடந்த காலம் என்பது
முடிந்து போனது
நிகழ்காலம் மட்டும்தான்
மகிழ்ச்சிகரமானது
ஆதலால்....
இந்நாளும், எந்த நாளும்
நன்நாள்தான்
ஒவ்வொரு விடியலும்
புதுமையானதுதான்
உழைவனின் உழைப்பு
விவசாயத்தின் மதிப்பு
வியர்வை சிந்தாமல்
மண்ணிற்கேது செழிப்பு?
எண்ணத்தின் சிறப்பு
இன்பத்தின் பிறப்பு
வாழ்க்கை மலர
வண்ணத்தை நிரப்பு
மனிதனை சக மனிதன்
மதிக்கவில்லையன்றால்
ஆண்டின் முதல் நாளை மட்டும் கொண்டாடுவதால்
மகத்துவம் அடைவோமா- சொல்?!
ஒவ்வொரு நாளையும்
அனுபவித்துச் செல்!