காதல் கோட்டை

அவளது மனம் எனும் பறவை
எண்ணம் எனும் சிறகை
பருவம் வந்ததும் விரித்து
பறக்கத் துடிக்கிறது,
அச் சிறகுகள் மகிழ்ச்சி எனும்
ஆகாயத்தில் பறக்க தொடங்குகிறது .
அது ஆசையின் பெருமிதத்தில்
மிதந்துவரத் துடிக்கிறது ,
காதல் எனும் வலையில்
கண்ணி வைத்தான் ஒருவன் ,
மிதந்து வந்த கன்னி மனம்
கண்ணியில் சிக்கி விட்டது .
அவ்வளவுதான் மீள முடியவில்லை ,
துடித்தது பறக்கத் துடித்தது அவள் மனம்
பாதி மயக்கம் அவனை கண்டதும்
மயங்கினாள் மெல்ல கிறங்கினாள்
அவன் கரம் தொட்டதும் ,
எண்ணப் பறவையால் கன்னி மனம்
வசமாக மாட்டிக் கொண்டது அவனிடம்
எண்ணங்கள் இரண்டும் ஒன்றுடன் ஓன்று
காதல் எனும் கோட்டைக்குள் .

எழுதியவர் : பாத்திமாமலர் (10-Jan-19, 11:35 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaadhal kottai
பார்வை : 247

மேலே