நதி அலையில் படகினில் உன் மடி மீது நான்

நதி அலையில் படகினில்
உன் மடி மீது நான் படுத்திருக்க
என் சிகையை உன் விரல்களால் நீ மெல்ல வருட
அலைகளின் அசைவில் படகு ஆடி ஆடி செல்ல
அந்திக் கதிரும் தயங்கித் தயங்கி விடை பெற
அந்த மாலைப் பொழுதுகளின் அழகிய நினைவுகள்
எனது நாட்குறிப்பின் பழுப்பான பக்கங்களில்....
இன்றும் புரட்டும் போது நினைவலைகள்
நீரை வாரி இரைக்கின்றன என் மீது ...
அன்று நீரை இரைத்த போது நீ சிலிர்த்தாய்
இன்று நான் .....

எழுதியவர் : கவின் சாரலன் (10-Jan-19, 7:06 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 37
மேலே