கண்கள் பேசுதடி

கண்கள் பேசுதடி உன்னோட காதல
காற்றும் வீசுதடி உன்னோட மூச்சுல நீ நடந்து போனால் பாதை எல்லாம் பாட்டு பாடும் . உன் குரலை கேட்டு குருவி கூட கூட்டை பறக்கும் . காதல் விழிக் கொண்டு என்னை நீ சுழி செய்தாய் . ஆழி போல் நீயும் உன்னுள்ளே ஈர்த்துக்கொண்டாய் .
கண்கள் பேசுதடி ...

நகர்கின்ற நொடி கூட நகராமல் நின்றுப்போகும் நகராமல் நின்றுவிட்டால் காதல் படிகள் மேலே கூடும் .
தவிக்கின்ற நெஞ்சம் என்றும் உனை நினைக்க மறக்காது உனை நினைக்க மறந்துவிட்டால் என் உயிரும் இயங்காது .
கண்கள் பேசுதடி ...

நீ சிரிக்கின்ற சிரிப்பிலே என் சிறு இதயம் நொறுங்குதடி உடைந்த இதயம் தான் உன் பெயரை சொல்லுதடி .
கண்கள் மூடவில்லை கனவில் நீ வந்ததால் கனவோ தோன்றவில்லை கண்கள் நான் மூடியதால் .
கண்கள் பேசுதடி ...

எழுதியவர் : M. Santhakumar . (13-Jan-19, 6:46 am)
சேர்த்தது : Santhakumar
Tanglish : kangal pesuthadi
பார்வை : 339

மேலே