எல்லாவற்றிலும் சிறந்தவள்
பெண் அவளை காதலிக்க
எண்ணி நான் காத்திருந்தேன்
கன்னியவள் காட்சி தந்து
கண்களுக்கு குளிர்ச்சி தந்தாள்
சின்ன இடை துள்ளி வர
பெண் அவளும் நானி வந்தாள்
கண்கள் இரண்டும் காளையாய் மாற
பெண் அவளைப் பின் தொடர்ந்தேன்
அருந்தவத்தின் பெரும் பயனாய் - நான்
இப்புவியில் பிறந்தேன் என்று - என்
பெற்றோர் கூறக் கேட்டேன்; ஆயினும்
என் உள்ளம் புகுந்த அவளே - உலகில்
எல்லாவற்றிலும் சிறந்தவள் ஆனாள்.
-- நன்னாடன்