மகனின் மகளாய்
தாயவள் தன்
தனயனின்...
வாலிப சறுக்கல் கிறுக்கலை காண
வலைதள பயன்பாட்டுக்கு
வருபவள்...
உற்ற தோழர்கள் உரிமைக் கேலிக்கு
உறுத்தல் இல்லாமல்
உதவுபவள்....
தாமதமாய் வீடு திரும்பும் இரவில்
தயங்காமல் திட்டித்
தீர்ப்பவள்...
இருசக்கர வாகன பின் இருக்கை ஏற
இஷ்ட தெய்வத்தை உதவிக்கு
இழுப்பவள்....
தந்தை-மகன் தன்மான உரசலில்
தயங்காமல் தன்னவனை
தடுப்பவள்...
இத்தனையும் செய்பவள்
ஓர் சிறு உடல் நிலவில்...
மகனின் கரிசன கோபத்தை காண
மருந்து மறுக்கும் அடம்பிடிப்பில்
மகளாய்
மாறுபவள்.....