கலைந்த காதல்

காதலே காதலே நீ கார்மேகம் போல் கலைந்து போவது ஏன்!
காற்றே காற்றே என் கண்களில் கண்ணீர் மழை ஏன்!
மனமே மனமே நீ மட்டும் மறவாமல் வலியில் துடிப்பது ஏன்!
காலமே காலமே நீ மட்டும் கடந்துபோகின்றாய் காதல் விதையை விதைத்து விட்டு
என்னால் கடக்க முடியவில்லையே ஏன்!
காதலே காதலே நீ காயம் செய்தது ஏன்!
நெஞ்சே நெஞ்சே என் மனம் இடிமின்னல் போல் இடிந்துபோனது ஏன்!
கனவே கனவே நீ மேகம் போல் கலைந்து போனது ஏன்!
கண்ணீர் மழையில் கவிதையாய் நனைகின்றேன் நான்

எழுதியவர் : kayal (24-Jan-19, 12:41 pm)
சேர்த்தது : கயல்
Tanglish : kalaintha kaadhal
பார்வை : 235
மேலே