முதியோர் இல்லம் ..!
இங்கே எல்லாருமே
அந்நிய தேசத்து அகதிகள் !
எஞ்சிய வாழ்க்கையை
எப்படி கழிப்பது என்று
அச்சத்தோடு அசைபோடும்
பிள்ளைகள் எனும் சனியன்கள்
ஆதரிக்க மறந்த,
மனித தெய்வங்கள் வாழும்
மாதிரி ஆலையங்கள் !
வாழ்க்கையில் வசந்தத்தை இழந்த
முதிய வாலிபர்களின்
இறுதி விலாசம் !
நன்றிகளுடன் ,
வசிகரன்.க..