வைகறை வேளை
வைகறை வேளை அற்புத வேளை
தெய்வங்கள் வானில் உலாவும்
நலம் நல்கும் உன்னத வேளை
புள்ளினங்கள் எல்லாம் துயில் துறந்து
பாடியும், கரைந்ததும் நமக்கு
பள்ளி எழுச்சிப் பாடும் இனிய வேளை
பசுமரங்களின் பச்சிலைகளின் மேல்
தூங்கும் முத்தான பனிமலர் கூட
இளங்காலை கதிரோனின் கதிர்கள் பட்டு
விரைந்தே எழுந்து காணாமல் போகின்றனவே
சோம்பலைத் துறந்து !; நாமோ, இவை எதற்கும்
செவி சாய்க்காததுபோல் துயிலிலிருந்து எழுந்திட
மனமிலாது சோம்பித்திரிவது ஏனோ.... தெரியலையே
வாழும் நாட்கள் எத்தனையோ யாரறிவார்
அவனைத் தவிர, ஆதலால் நன்மைப் பயக்கும்
வைகறை நேரத்தை வீணாக்கலாமா ......இளைஞர்களே
வைகறையில் துயில் துறந்து நாளின் பணியைத்
துவக்கிடுவீரே நன்மைப் பயக்கும் அதுவே
என்று அறிந்திடுவீரே