ரோஜாவும் தீனாவும்

காதலர்களே காதலர்களே தயவு செய்து என்னை பறித்து விடாதீர்கள்...

கவிதையில் மலர்களை மங்கை
என்பாயே நானும் பெண் தானே...
என்னை தொட்டு பறித்து விட்டாள் உன் கற்பு என்ன ஆவது....
உன் காதலிக்கு எப்படி உண்மையானவராக இருப்பாய். தயவு செய்து என்னை பறித்து விடாதே!!...
கற்பு பெண்களுக்கு மட்டும் தானா!!...
கற்பு மனிதர்களுக்கு மட்டும்தானா மலர்களுக்கு இல்லையா!!..

காதலில் நான் தான் உங்களுக்காக என் உயிரைக் கொடுக்கிறேன்....
சில நேரம் அவள் கூந்தலில்...
சில நேரம் அவள் பாதத்தில்....
நான் மிதிபட்ட பிறகுகூட நீ அவள் பாதத்தை நினைத்து கவலைக் கொள்கிறாய்.



காதலர்களே காதலர்களே பரிசாக மலர்களை கொடுப்பதற்கு பதில் மனங்களை கொடுங்கள்...காதல் வாழும்.

ரோஜாவை பறிக்கும் போது எல்லாம் எனக்கு இப்படிதான் தோன்றுகிறது...
ஒரு பெண்ணின் இதயத்தை பறித்து இன்னொரு பெண்ணிடம் கொடுப்பது போல....
ஒரு பெண்ணே இன்னொரு பெண் மீது காதல் கொள்வது போல...
தயவு செய்து ரோஜாவை வாழ விடுங்கள்.
தயவுசெய்து ரோஜாவை பறித்து விடாதீர்கள்...

#தீனா

எழுதியவர் : (2-Feb-19, 8:29 am)
சேர்த்தது : தீனா
பார்வை : 125

மேலே