அத்வைதம் - அமரம்
![](https://eluthu.com/images/loading.gif)
வார்த்தைக்குள்
பிடிபடா
அர்த்தங்கள்
மௌனங்களால்
உடைபடுகையில்
அர்த்தப்படுகிறது
வாழ்வு..!
அர்த்த அனர்த்தங்களின்
கோர்வைக்குள்
சிக்கித் தவிக்கும்
மானுட வாழ்வு
புரிபடும் தருணத்தில்
பிரிந்துவிடுகிறது..
எது சரி.?
எது தவறு..?
என்ற
தேடலிலேயே
தொலைகிறது காலம்..
வாழ்வு
கற்பித்த பாடங்கள்
புரிபடா நிலையிலேயே
இறுதி வரை..
மானுடம் கூறும்
வாழ்வு
அத்வைதம்..!
வாழ்வு கற்பிக்கும்
மானுடமே
அமரம்....!