பிச்சைக்காரன்
நொடிக்கு நொடி மாறும் நிமிடங்கள்
இயந்திரமாய் வாழும் மனிதர்கள்
எதற்கான ஓட்டம் என்றறிய பிறவிகள்
வாழ்வை வாழத்தெரியாத மடையர்கள்
பதிலை தேடி தேடி ஓய்ந்து போனேன்
நானும் ......
சட்டென்று ஒருகுரல் ஒலிக்க
அம்மா ..... என்று ஒலி கேட்க
திரும்பிப்பார்த்தேன் நானும்
கிடைத்தது பதில்
ஓடும் ஓட்டம் எல்லாம்
ஒரு சாண் வயிற்றுக்கா ...?