உறவுகள் இன்று
உறவுகள் இன்று...
ஆத்மார்த்தமான உறவுகள்
தொலைந்துதான்
போனது
பார்த்தவுடன் பரிதவிப்பு
அனுசரனை அற்புதமான
நடிப்பும் கூட
பத்தடி தாண்டியதும்
பறந்து போகின்றது
சிறிய வட்டத்துக்குள்
வாழ்க்கை
கூட்டுக்குடும்பங்கள்
சிறு சிறு கூடுகளாக
சுயம் மட்டுமே நிதர்சனம்
வரம் தந்த பெற்றோர் கூட
தாங்க முடியா பாரம்
இங்கும் அங்கும்
பிள்ளைகளை நாடி
அதுவும் முதுமை என்றால்
பெரும்பாடு
வாழ்க்கை கற்று தரும் முதல் பாடம்
குடும்பம் குட்டி தேவையா என்று
காலம் கடந்த சிந்தனை அன்றோ
அனுபவத்தை அவரவர்
அனுபவத்தில்
யார் கேட்கிறார்
பட்டால் தான் தெரிகிறது
சுட்டால் தான் புரிகிறது நெருப்பு என்று ...