என் காதல் ஓசை

உன் கருவிழியில் ஒளியாக நான்
என் வழியாய் இவ்வுலகம் காண நீ......
உன் அரும்பு மீசையின் நுனியாக நான்
நிதம் தீண்டிட நீ.....
நீ கேட்கும் மெல்லிசையாய் நான்
உன் செவி நுழையும் வரம் வேண்டி....
நீ சுவாசிக்கும் ஆக்ஸிஜனாக நான்.....
உன் உயிர் மூச்சில் கரைய.....
உன் தாய் மொழியாய் நான்
அனுதினமும் உன் நாவில் பிறக்க...
உன் குருதி்அணுவாக நான்
உன்னுள் ஆறாய் பெருக....
உன் நினைவின் எண்ணஅலையாக நான்
நொடிப் பொழுதினும் எனைப் பிரியா நீ....
நீ தொழும் தெய்வத்தின் நாமாவளியாக நான்
இன்பத்திலும் துன்பத்திலும் ஆறுதலாக.....
குளிர் ஜூர வேளையில் உந்தன் மேனித் தழுவிடும் கம்பளியாய் நான்
தேகம் போர்த்தி உனை காத்திட....
உன் இதய அறை நான்கில் ஒன்றாக நான்
உந்தன் வாழ்நாள் முழுதும் உன்னுள் உறைய.....
உன் வீட்டின் நிலைக் கண்ணாடியாக நான்
உனை என்னில் காண....
நீ ரசிக்கும் கடலின் அலையாக நான்
உன் தந்தப் பாதம் வருடிட...
இஃதுள் நானும் ஒன்றாகி
உனை சேர எத்தவம் இயற்றுவேனோ என்னவனே.....

எழுதியவர் : தமிழநி (21-Feb-19, 3:08 pm)
சேர்த்தது : தமிழநி
பார்வை : 129

மேலே