நுவலுங்கால் வெண்பஞ்சின் நொய்தாம் இரப்போன் – நீதி வெண்பா 8
நேரிசை வெண்பா
நொய்தாம் திரணத்தின் நொய்தாகும் வெண்பஞ்சின்
நொய்தாம் இரப்போன் நுவலுங்கால் - நொய்யசிறு
பஞ்சுதனில் நொய்யானைப் பற்றாதோ காற்றணுக
அஞ்சுமவன் கேட்ப(து) அறிந்து. 8 நீதி வெண்பா
பொருளுரை:
சொல்லப் போனால், வெண்பஞ்சானது கேவலமான துரும்பினும் மிக கேவலமானது;
யாசகன் கேவலமான எளிய பஞ்சைக் காட்டிலும் கேவலமாகும்;
கேவலமான இவனைக் காற்று அடித்துக் கொண்டு போகாதோ என்றால், அவன் ஏதேனுங் கேட்பான் என்பதறிந்து அது அவனருகில் போவதற்குப் பயப்படும்.
கருத்து:
யாசகர் இலேசான மதிப்பற்ற பஞ்சினை விட மிகவும் எளியவர்.