தூது விட ஆசை

காற்றை தூது விட ஆசைதான்
ஆனால் தூது விடமாட்டேன் !

மழையை தூது விட ஆசைதான்
ஆனால் மறந்து விட நினைத்துவிட்டேன்
மழையிடம் தூது சொல்ல – சரி

தீயிடம் தூது விடலாம் என்றால் - அது
அவனை கண்டதும் அணைந்து விடுமே !!!

எல்லாம் போகட்டும் – நிலத்திடம்
தூது சொல்ல நினைத்தேன் – அவளிடம்
தூது விட்டால் அவளுக்கும் அவன் மீது
காதல் வந்து விடுமே !!!

அனைவருக்கும் அவன் மீது காதல்
வந்துவிடுமோ ? என்ற எண்ணத்தினால்
யாரையும் தூது விட எண்ணவில்லை

ஏன் தெரியுமா ??? – அவன் என்னவன்
எனக்காக பிறந்தவன் காதலே காதலிக்க
நினைக்கும் அளவிற்கு அன்பானவன் !!!

இவள்
கீதாவின் மகள்.

எழுதியவர் : கீதாவின் மகள் (1-Mar-19, 5:15 pm)
சேர்த்தது : கீதாவின் மகள்
Tanglish : thootu vida aasai
பார்வை : 74

மேலே