விலகியெனை வெறுப்பதேனோ

சலனமறு முகிலினின்றும்
பொல பொலவென்றவிழ் துளிகள்
உலர்மண்ணைத் தழுவ - வேதிக்
கலவியொன்று நிகழுதடி!

நிலவாயென் மனவானில்
உலவுகின்ற கண்மணியே!
விலகியெனை வெறுத்து - வேளை
செலவு செய்வதேனோடீ!

✍️ தமிழ்க்கிழவி.

எழுதியவர் : தமிழ்க்கிழவி (6-Mar-19, 10:16 pm)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
பார்வை : 155

மேலே