பலூன்காரன்

வண்ண வண்ண
காற்று பூக்கள்
கொம்பில்
பூத்திருக்கின்றன

குழந்தை வாடகையாளரை
தேடி தெருவில் வருகிறான்
ஒலி எழுப்பியபடியே பலூன்காரன்

நாய்குட்டி பலூன்
பூனைக்குட்டி பலூன்
சண்டையிடாமலே
கொம்பில் அமர்ந்து
குழந்தைகளை பார்க்கின்றன

கூடிவிட்டது
குழந்தைகள் கூட்டம்
பலூன்காரனை சுற்றிலும்
சிரித்த முகத்தோடு

அழுது அடம்பிடித்து
தங்களுக்கு பிடித்த
பலூன்களை வாங்கி
மகிழ்கிறார்கள்
இந்த குழந்தைப்பூக்கள்

குமரன் குமரிகளோ
தங்கள் மனதுக்குப்பிடித்த
இதய பலூன்களை
அழுது அடம்பிடித்து வாங்காமல்
கிடைத்த இதய பலூன்களில்
காற்றை நிரப்பி
காலத்தை ஓட்டுகிறார்கள்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (10-Mar-19, 6:46 am)
பார்வை : 43

மேலே