பாசத்தைக் கொல்லும் பணத்தாசை

பணத்துக்காக புணம் தின்னும் கழுகுகள்/
பணம் தினிக்கும் பட்சிகள்/
பணத்தோடு ஒப்பிட்டு உயிரைத் தூசியாய் துடைத்தெறியும் ஒட்டறைக் குச்சிகள்/
பணமே வாழ்க்கை என்று பகல் கனவு காணும் மடச்சிகள் /

பணம் பகட்டு பெரிது என்று ஓடும் முட்டாள்கள் /
பணத்துக்காய் பாசத்தை எரிக்கும் எருமைகள் /
பணத்தையே முதன்மைப் படுத்தி
சிரித்து மகிழ்ந்து /
இறுதியில் தெருவில் அலையப்
போகும் பைத்தியங்கள் /

அச்சடித்த காகிதத்துக்காக
கட்டியவனை நச்சரிக்கும் கூட்டங்கள் /
அடிக்கிய பணத்தில் உருள்வது தான்
இன்பம் என நினைக்கும் மந்தைகள் /
அடிமேல் அடி கொடுத்து அன்புக்குப் பிடி கொடுக்காமல் பணத்தை அபகரிக்க துடிக்கும் கள்வர்கள் /

பெண்ணாக உருவெடுத்து பணப் பேயாக உலாவும் அரக்கிகள் /
தேவதையாயக் காட்சி கொடுத்து
பூலோகத்தில் நடமாடும் எமன்கள் /
நேசம் பாசம் அன்பு கருணை கனவிலும் கலந்திடாத இரு பாறைகள் இவர்கள் /



(சந்திரலேகா நாடகம்
கொடுத்த கற்பனை 😄)

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (16-Mar-19, 6:50 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 105

மேலே