தமிழன் இந்தியனாக ஏற்றுக்கொள்ளப்படுவானா

இந்திய அரண்மனையின்
தென்கோடி மாளிகை தமிழ்நாடு!
இப்பொன் மண்ணில் விளைந்த
நன்குமுதிர்ந்த நெல்மணிகள்
ஒவ்வொன்றினுள்ளும் அரிசி இருப்பது போல
ஒவ்வொரு தமிழனுக்குள்ளும்
ஓர் இந்தியன் இருக்கிறான்!

அவன் வெற்றியாளன் ஆகையில்
நெல் மீதிருந்த உமி நீங்கி
இந்தியனாய் அறியப்படுகிறான்!
ஆனால் தோல்வி அடைகயில்,
பிரச்சனைகள் சூழ்கையில்
உலகோர் பார்வையிலிருந்து
உமி நீங்க மறுத்துவிடுவது ஏன்?
அது தமிழனின் பிரச்சனையாவது ஏன்?

வளமான செம்மண்ணில்
உழுதுண்டு வாழ்ந்தவன் -இன்று
காவிரி பிரச்சனையால்
காய்ந்து கிடக்கிறான்!
ஆழ்கடலில் அசாதாரணமாய்
முத்துக்குளித்துப் பழகியவன்-இன்று
சுட்டுக்கொல்லப் படுகிறான்!

உமி நீங்கியதாய்த் தோன்றும்
அரிசியை மட்டும் பார்க்கும்
இந்திய அரசே!
அரிசி பசியை மட்டுமே போக்கும்!
விதை நெல்லே மீண்டும்
அரிசியினை உருவாக்கும் என்பதை
எப்போது உணரப்போகிறீர்கள்?

அரசியல் அறிஞர்களே!
நாங்கள் கட்சிகளையும் ஆட்சிகளையும்
நம்பிய காலங்கள் கடந்துவிட்டன!
எங்கள் உரிமைகளுக்கு நாங்களே
உரிமையாளர்களாகத் தொடங்கிவிட்டோம்!
மஞ்சுவிரட்டு வெற்றியும்
சடெர்லைட் போராட்டமும் நினைவிருக்கட்டும்!

தமிழன் தன் பிரச்சனைகளுக்குத்
தீர்வு காணும் நாள்
வெகு தொலைவில் இல்லை! -அன்று தமிழனை மதிக்காத அரசு
தலைகுணிந்து அவனைத்
தூக்கி வைத்துக் கொண்டாடும்!!

எழுதியவர் : சுவாதி (17-Mar-19, 4:07 pm)
சேர்த்தது : சுவாதி
பார்வை : 80

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே