காதல் மயக்கம்---இதழகல் நேரிசை ஆசிரிப்பா---
இதழகல் நேரிசை ஆசிரியப்பா :
கழற்கால் ஆடக் கனாக்கள் கண்டேன்
தழற்கண் நங்கையாற் தணிந்திட நின்றேன்
அழகிய தீயாய் ஆர்கலி அலையாய்
நிழலைத் தீண்டிட நித்திரை இழந்தே
கிழங்காய்த் தரையடிக் கிடந்திடக்
கிழக்கின் கதிராய் எழச்செய் தனளே...