அவளின்றி நானில்லை

அன்பே !!!
வீடில்லை என்றேனடி
உன் இதயத்தில் குடியேற்றினாய்,
உணவில்லை என்றேனடி
உன் முத்தத்தை உணவாக்கினாய்,
விட்டில் பூச்சியையாவது
காண ஆசைப்பட்டேன்
நிலவாய் நீ தோன்றினாய்,
உன்னுள் விழுந்தேனடி-பெண்ணே
எழுவதற்கோ மனமில்லை.
மீண்டும் எழுந்தால் கூட -அன்பே
நான் குழியில் விழுவேனடி
உன்னை நினைத்து
மரணக் குழியில் விழுவேனடி.

உன் பாசங்கள் எல்லாம்
என் தாய் அன்பு போல,
உன் கோபங்கள் எல்லாம்
என் தந்தையன்பு போல,
என்னை வாட்டி வதைக்குதடி
உன் அன்பில் விழ -என் கால்கள்
மீண்டும் துடிக்குதடி.

சொர்க்கமாய் வந்தாயடி-என் வாழ்வில்
சந்தோஷம் தருவதற்கு,
பக்கமாய் நிற்பாயடி-நான் என்றும்
பகலவனாய் திகழ்வதற்கு.

ஆறடிகுழியில் ஆண்டவன் தள்ளினாலும்
அரைநொடியில் எழுந்து விடுவேன்
அன்பு வைத்த நீ அழைத்தால்,
ஆண்டவனே தூக்கினாலும்
ஆழக்குழியில் மீண்டும் விழுவேன்
நீ என்னை நீங்கிச்சென்றால் !!!!!

எழுதியவர் : பிரபுகுமார் நாகேஸ்வரி (21-Mar-19, 10:26 pm)
சேர்த்தது : PrabhuKumar Nageswari
பார்வை : 208
மேலே