முதல் சந்திப்பிலிருந்து ...!

முதல் சந்திப்பு...
உன்னருகில் நான் வந்தமர்ந்த முதல் நொடி
அப்போதே என்மனதின்
எங்கோ ஓர் மூலையில் உறைத்தது
நீ என் காதல் கிளிதான் என்று...!
எல்லோரிடமும் பழகினாலும்
உன்மீது எனக்கிருந்த அன்பு
அப்போதே ஓர் படி மேல்தான் ...!
என்னிமித்தம் மற்றவரால் நீ சந்தித்த
பிரச்சனைகள் பல்வேறு...
நாமிருவரும் இணைத்துப் பேசப்பட
அப்பிரச்சனைகளே காரணமாக
உன்மீது அதிகப்பட்ட என் அன்பை
காதல்தான் என்று நான்
அறிந்திருக்கவில்லை அப்போது ...!
இப்படியே நாட்கள் உருண்டோட
உன்னையுமறியாமல்
உன்மனதில் நான் வந்து குடியேற
உனக்குள் நானும்
எனக்குள் நீயும்
வாழ்ந்து வந்தோம் ஒருவரிலொருவர்
நம்மையுமறியாமல் ...!
காத்திருக்கவில்லை நாம் காதல் செய்ய ...
நமக்காக கனிந்ததுவே காதல் காலம்
கனிந்த அக்காதல் காலம்
பிரிவைத்தந்தது...
அப்பிரிவின்போது உனக்காய் ஒரு
கவிதை தந்தது ...
கவிதையோடு பிரிவும் அங்கே
சேர்ந்து வந்தது ...
அது எத்தனையோ நாள் நமக்குள்ளிருந்த
காதலைப் பரிமாறச் செய்தது ...!
அந்நாள் முதல் இந்நாள் வரை
நாம் பயணிப்பது
காதல் பாதையில் ...!
நம் காதல் பாதையில்
இடையூறு எத்தனை வந்தாலும்
நம் அன்பெனும் ஆயுதத்தால்
வென்று நடை போடுகிறோம் ...!
நாம் கடந்து வந்த காதல் பாதையில்
ஒவ்வொருநாளும்
ஒவ்வொரு மணி நேரமும்
ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு மணித்துளிகளும் சாட்சி
நம் காதலின் மலரும் நினைவுகளுக்கு ...!
ஓர் நாள் பாரவிட்டாலும்
ஓர் நொடி பேசாவிட்டாலும்
நம் உள்ளம் துடிக்கும் துடிப்பே
நம் உண்மைக் காதலுக்கு சாட்சி ...!
உன்மேல் காதலென்று அறியாமல்
உன்னைக் காதலித்த காலமொன்று
உன்னையுமறியாமல் உன் காதலை
என்னிடம் நீ தெரிவித்த காலமுமொன்று
ஆனால் ...
நாம் அறிந்து, உணர்ந்து
மனதாரக் காதலிக்கும் காலமின்று ...!
வெற்றியில் முடிந்த காதல் சிலவுண்டு ...
தோல்வியில் முடிந்த காதல் பலவுண்டு ...
ஆமாம் ....
நம் காதலின் முடிவுதான் என்ன ?
அன்பெனும் அரியணையில்
வாடா காதல் மலர்களாய்
முத்த கிரீடங்களோடு
என்றென்றும் நாம் ....!