பெண்ணே

உன்னில் உறுதி வேண்டும்
ஒவ்வொன்றையும் ஆராய வேண்டும்
கண்ணால் வடிகட்ட வேண்டும்
காணும் நிகழ்வில் வினா வேண்டும்
அலங்காரத்தில் அளவு வேண்டும்
அதீத நம்பிக்கையில் எல்லை வேண்டும்
அனைத்து வார்த்தையையும் அலச வேண்டும்
காதல், காமம் பகுத்தல் வேண்டும்
கடுமையான கோபம் களைதல் வேண்டும்
எதிர்தரப்பை எந்நாளும் விளங்குதல் வேண்டும்
அழகை போற்றுவோரிடம் எச்சரிக்கை வேண்டும்
தாழ்ந்து வருவோரிடம் தள்ளி விலகல் வேண்டும்
தவறு நிகழின் தன் பிறந்தோரிடம் பகிருதல் நலம்
அங்கம் சீண்டுவோரை அழிக்க துணிதல் வேண்டும்
எவ்வகை இடர் வரின் எதிர்த்து நிற்றல் வேண்டும்
சிறு தவறு எனில் சிந்தித்து எதிர் கொள்ள வேண்டும்
பணியில் பலவந்தம் வரின் பட்டாசாய் மாற வேண்டும்
மனபலம் நிறைந்து விட்டால் - உனக்கு
மனிதர் செயல் குறைகள் தெரியும்.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (25-Mar-19, 8:09 am)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : penne
பார்வை : 170

மேலே