ஆசை

ஆசை

அடங்காத ஆசையால்
அழியும் மானுடம்
ஆசையை தினம் சோறு போட்டு செழுமையாக்கி அது பேராசையாக வளர்ந்து வானுயர்ந்த அரக்கனாக ஆட்டிபடைக்கிறது
காட்டு தீயாக பரவி கொழுந்துவிட்டு எரிகிறது
போதும் என்ற தண்ணீர் யார் ஊற்றுவது
அந்த நல்ல எண்ணம் எப்போது துளிர் விடும்
யார் அந்த தண்ணீரை ஊற்றுவது
ஊற்றி யார் வளர்பது
பூனைக்கு யார் மணி கட்டுவது
அந்த நல்லதொற்று நோய் பரவவினால்
மானுடம் மீண்டும் ஒரு வேளை மீள வாய்ப்பு உண்டு
அன்பு என்ற பூ மலர வாய்ப்பு உண்டு.

பாலு.

எழுதியவர் : பாலு (30-Mar-19, 3:54 pm)
சேர்த்தது : balu
Tanglish : aasai
பார்வை : 464

மேலே