தலைவன் ஒருவனே

கண்கள் முடங்கினால் பார்ப்பது எப்படி?
காதுகள் முடங்கினால் கேட்பது எப்படி?
நாக்கு சுளுக்கினால் உண்பது எப்படி?
மூக்கடைத்து மூச்சு நின்ற பின் உயிர்வாழ்வது எப்படி?
உடல் அழிந்தபின் இவ்வுலக இன்பம் ஏது?
என்றவாறு ஐம்புலன்களைச் சுற்றியிருக்கிறது மனிதர்களின் கவலை.

மடியில் கணமிருப்பவன் தான் தன்னை தானே பிரகடனப்படுத்திக் கொள்கிறான் கடவுள் மறுப்பாளனாக.
இருந்தாலும் அவனால் கடவுளை தினம் இல்லையென அர்ச்சனை செய்யாமல் வாழ முடியவில்லை என்பதே நடைமுறை உண்மை.

இல்லை என்பதும் நீதான்.
இருக்கு என்பதும் நீ தான்.
இல்லை என்றபின் சில நல்ல மனங்களும் ஆபாசக் கிணற்றில் விழுந்து தத்தளிக்கின்றன.
அந்த தத்தளிப்பின் முடிவில் அவற்றின் அறிவில் தெளிவின்றி எல்லாரையும் குழப்பத் தொடங்கிவிடுகின்றன.

நாம் யார் என்பதை நாமே தீர்மானிக்கிறோம்.
அந்த உரிமையை அடுத்தவரித்தில் கொடுப்பது தான் இந்த வாக்குரிமை.
தன்னம்பிக்கை உள்ளவர்கள் தனித்துவம் வாய்ந்தவர்களாக இருப்பார்களே தவிர
கைகளை ஏந்தி பிறரிடம் பிச்சை கேட்டு நிற்பதில்லை.
ஆதிமூலமாகிய அருட்பெருஞ்சோதியே என் அகத்தில் உறைந்து நிறைந்த தலைவன்.
மற்றவை எதற்கும் அடிபணிய இயலாது,
முடியாது.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (30-Mar-19, 11:48 am)
Tanglish : thalaivan oruvane
பார்வை : 3874

மேலே