ஒன்றும் சுழியும்

ஒன்றும் சுழியும் கணினி மொழியாம்
ஒன்றுடன் சுழியம் ஒத்துழைக்காதெனில்
ஒவ்வொரு முடிவும் ஒவ்வாத முடியும்
ஒத்தக்கருத்தால் உலகம் ஒத்துக்கொண்ட முறையாம்

விசைப்பலகை வழியே உந்து செயல் நுழையும்
ஒவ்வொன்றும் கணினி மின் திரையில் தெரியும்
பார்த்தவாறே வார்த்தையால் தூண்டல் செய்யின்
பலமான பல பல வெளியிடுகளை கொடுக்கும்

நிலையான மொழியென இதற்கு பல்வேறு உண்டு
நிதிக்கேற்று இதனில் வகைகளும் உண்டு
தினையளவு இதற்கு திட்டங்கள் கொடுத்தால்
பனையளவு நமக்கு இது பல பயனைக் கொடுக்கும்.
--- நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (3-Apr-19, 7:10 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 791

மேலே