ஊர் குருவி ஊர் குருவிதான்

!! ஊர் குருவி ஊர் குருவிதான் !!


ஓர் ஊர் குருவி சந்தோசமா மரத்தில தாவி தாவி விளையாடிட்டு இருந்தது,, கொஞ்ச நேரம் விளையாடிய குருவி மூச்சு வாங்க பக்கத்தில் இருந்த பாட்டி வீட்டு தொட்டியில தண்ணீர் பருகியது, மீண்டும் வந்தது தன் ஜோடியை தேடியது, கீச்சு கீச்சு என்று கூக்குரல் இட்டது, தன் தலைவனின் குரல் கேட்டு ஞானத்தோடு தன் பார்வையை அலையவிட்டது ஜோடிக் குருவி, தன் இணையின் தேடலைக்கண்டு நான் இங்குதான் இருக்கேன் என்பதை உறுதிசெய்ய தன் சங்கீத ஸ்வரத்தை உயரத்தியது இந்த ஊர் குருவி, பட்டு போன்ற தன் குட்டிச் சிறகை காற்றில் பட படக்க கண்இமைக்கும் நொடியினிலே தன் தலைவனை அடைந்தது ஜோடிக்குருவி.

வந்த கனம் அறியேன்
நின்ற கனம் அறியேன்
நொடி வீன்னாற்று
மூச்சை பகிர்ந்தது குருவிகள்,


முத்ததில் மூச்சை பரிமாறிய குருவிகள், ஓடியும் ஆடியும், ஒழிந்தும், கண்டும், சிறகடித்தும், கீச்சிட்டும், கிளைகள் தாவியும், ஆர்பரித்துக்கொண்டிருந்தது, ஓடி வந்த ஜோடிக் குருவி தன் இணையிடம் காதில் சொன்னது தன் வயிற்றில் வரும் பசியின் சப்ததை, பசியை ஆற இரை தேட கைக்கோர்த்து சிறகடிக்க சிறு தூரத்தில், மொட்டைமாடியில் வத்தல் உணவாய் கிட்ட மகிழ்ச்சி துள்ள சிறகடித்து உணவை நோக்கி விரைந்தது.

அங்கு ஓர் காகம் வர காதல் ஜோடியை கண்டு பொறாமையோடு
தன் பேச்சை துவக்கியது, என்ன இளம் சிட்டுகளா காதலா?? நடக்கட்டும் நடக்கட்டும் என்று சென்னது, குருவிகள் புன்னகைப் பூக்க சிறகடிக்க காகம் வம்புக்கு இழுத்தது, முளைத்து மூனு இலை விடலா அதற்குள் இதுகளுக்கு காதலா? என சீண்ட, குருவிகள் முறைத்தது, என்ன இரண்டு கிரம் எடை பத்து அடிக்கு மேல போக முடியாது என்ன பருந்து மாதிரி திமிர் வேற என மீண்டும் வம்புக்கு இழுத்து உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாக முடியுமா என ஏளனம் செய்தது காக்கா..

இந்த சொல் குருவிகளின் தன்மானத்தை சீண்டியது, உயர உயர பறக்க முயன்றது அந்த இளம் காதல் குருவிகள், இதை மேல பறந்த பருந்து பார்கிறது, மீண்டும் மீண்டும் இந்த குருவிகள் மேலே மேலே உயர உயர பறக்க முயற்ச்சிக்கிறது, மீண்டும் மீண்டும் தாழ்ந்த தாழ்ந்து போகிறது..
இதை கண்ட பருந்து கீழே இறங்கி ஊர் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் இந்த குருவிகளை தேடியது, இந்த குருவிகள் இளைப்பாற ஓர் மரத்தடியில் அமர்ந்து பறக்க இயலாததை பற்றி பேசிக்கொண்டு இருந்தது, அக்கனம் பருந்து வருவதை கண்ட குருவிகள் சற்று பயந்து போக நினைத்தது, ஆனால் பருந்து அதனுல் குருவிகள் அருகில் வந்தது, குருவிகளிடம் ஏன் இந்த முயற்ச்சி என்று வினாவியது?

குருவிகள் நடந்ததை விளக்கியது, காகத்துடன் நடந்த சவாலையும் விளக்கியது, பருந்து சிரித்தது பின்பு கூறியது நான் மேல பறப்பது சுகத்திற்காகவும் அல்ல, நான் பெரியவன், திறமையானவன் என்பதற்காக அல்ல, என் பசிக்காக நான் உயரே பறக்கிறேன் என்றது, குருவிகளுக்கு புரியாமல் விழித்து, காதல் மட்டும் செய்த குருவிக்கு பருந்தின் விளக்கம் புரியாமல் விழித்தது, இதை புரிந்த பருந்து விளக்கி கூறியது, உங்களின் உணவு எங்கே இருந்து கிடைக்கிறது? என்று வினாவியது. குருவிகள் எங்கள் உணவு பாட்டி கடையில வருகிற மிச்சம், மொட்டமாடி வத்தல், குப்பத்தொட்டி வாழைஇலை, வருஷந்தரம் இது போன்ற மனிதனுக்கு எஞ்சிய உணவுகள் என்றது, ஏன் அடர்ந்த காட்டுக்குள் உணவு தேடாமல்
ஊரினூள் உணவு தேடுகிறீர்கள் என்றது அடர்ந்த காட்டுக்கு நாங்க உணவு தேடிவந்த, நாங்களே மற்ற விலங்கிற்க்கு உணவிகிவிடுவோம் அந்த பயம்தான் என்றது அந்த இளம் குருவி, ஜோடிக்குருவி தன் பங்கிற்கு புன்னகையில் ஆம் என்றது.

என் உணவு இறந்த மிருகங்களும், உயிர்களும், இதை நான் மரத்தில் இருந்தோ காட்டில் திரிந்தோ தேட இயலாது, எனவே மேல உயர்ந்து
பறந்து என் உணவு எங்கே எனத் தேடிக் கொள்வேன், அதற்காகத்தான் மேல பறக்கிறேன் என்றது, உடனே குருவிகள் கோரசாக உணக்கென்ன மேல ஜாலியா பறக்குற எங்கள மாதிரி காக்ககூட சண்ட போட வேண்டாம், வேடனைப்பார்த்து ஓட வேண்டாமே என்றது, பருந்து இவுங்களுக்கு வாயில சொன்னப்புரியல, செய்முறை விளக்கம்தான் சரி என முடிவு எடுத்து உங்களுக்கு என்ன மேல பறக்கனும் அவ்வளவுதானே வாங்க எனக் கூறி மேல பறக்கச்சென்னது, சற்று உயரே பறந்ததும் குருவிகள் பறந்தின் நீண்ட சிறகுகள் மேல தாவிக்கொண்டது, இன்னும் சற்று மேல உயர குருவிகளுக்கு சற்று தலை சுற்றியது, இன்னும் சற்று உயர வெப்பம் எரித்தது, இன்னும் உயர மூச்சு திணறியது, குருவிகள் கதற பருந்து சிரித்துகொண்டே மேலும் சற்று உயர முறச்சித்தது, குருவிகள் ஓலமிட பருந்து தரை இறங்கியது..


குருவிகள் அப்பாடி தப்பித்தோம்டா என்று பெரும்மூச்சுவிட்டது, இப்ப சொல்லுங்கள் “ உயரப்பறப்பது எளிதா? ஊர் குருவியாய் இருப்பது எளிதா?” என்றது புன்னகைத்த குருவிகள் ஊர்க்குருவிதான் ஊர்குருவிதான் என்றது. பருந்து சொன்னது உங்களை சுற்றி நிறைய உயிரினங்கள், சிரித்து பேசி மகிழிந்திட உயிரினங்கள், ஆனால் நான் தனிமையில் மேல, கீழே வந்து யாரோடவது பேசலாம் என்றால் என்னை கண்டதும் தலை தெறிக்க ஓடிவிடுகின்றனர், ஊர் குருவி என்றும் பருந்தாக முடியாது உண்மைதான் ஆனால் பருந்தும் என்றும் ஊர் குருவியாக இயலாது என்பதும் உண்மைதான்!!! என்று அறிவுறை செய்துவிட்டு பருந்து சென்றது.

நீதி:, தன் திறைமைக்கேற்ப கஷ்டமும் இருக்கிறது, , கஷ்டத்திற்கேற்ப பலனும் இருக்கிறது, கஷ்டம் அறியாமல் பலனை கண்டு பொறமையடைந்து அந்த பலனை அடைய நினைத்தால் மூச்சுதிணறல்தான். மற்றவரின் வீம்புக்காக தான் உயர பறக்க நினைத்தால் மூச்சு முட்டி மரடைப்புதான்!!!

உங்கள்
தௌபீஃக்.

எழுதியவர் : தௌபிஃக் (8-May-19, 9:14 am)
சேர்த்தது : ஷிபாதௌபீஃக்
பார்வை : 220

மேலே