தத்துவ ரத்தினம்

உபநிடத வேதாந்தத்தை
உலகறிய செய்தவன்
பாரத ஞான ரதத்தினை
மேற்கு நோக்கி ஓட்டிய கிருஷ்ணன்
தத்துவ ரத்தினம் ஞான பொக்கிஷம்
பாரத ரத்தினம்
செப்டம்பர் ஐந்து
அந்த ஆசிரிய ரத்தினம்
பிறந்த தினம்
வணங்கி நிற்போம்
----கவின் சாரலன்