ஆப்தமித்ரா -3 டைரி
ஆப்தமித்ரா -3 (டைரி)
=====================
நான் பிரிவை நோக்கி பயணம் செய்துக் கொண்டிருக்கிறேன்..
என்னைவிட உன்னைவிட சிறியவனை
தற்போது நேசிக்கிறவளுக்கு
வாழ்த்துச் சொல்லும்
நாகரீகத்திற்கு உட்பட்டிருந்தேன்
இந்தப் பிரிவு
நீ இஷ்ட்டப்பட்டதுதானே
இப் பிரிவு
உன்னை ஏன் வாட்டுகிறது
நமக்குள் இருந்ததுதான் என்ன
விசித்திரம் நிறைந்ததாக இருக்கிறது
ஒருமுறை,
நிறைய குடித்திருந்தோம்
உன்னிடமிருக்கும் போதுதான்
போதைப் பிடிக்குமென்பாய்
ஏதேதோப் பேசிக் கொண்டிருந்தோம்
நம் உறவு முறைக்கு
ஏதேதோப் பெயரிட்டுக் கொண்டிருந்தோம்
உன் குணங்களுக்குள் என்னை விதைத்திருந்தாய்
உன் பிடித்தங்களில் காமம்
நிறைத்திருந்தாய் ..
ப்ரேமை என்று சொன்னால்
அது சத்தியசந்தியதை இல்லை,
இச்சை என்றுச் சொன்னாலும் ஏற்பதற்கில்லை,
இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட எதற்குள்ளேயோ நாம்
அடைப்பட்டுக் கிடந்திருந்தோம்
எந்த உறவின் பெயர்களுக்குள்ளும்
நம்மை நிறைக்கிறபோது
அவ்விடத்தில் மெளனம் இழையோடுகிறது
அது அவ்வுறவின் மீதான
தெளிவின்மையா, வெறுப்பா, மரியாதையா
தெரியவில்லை
சிலநேரம்
அன்யோன்யத்தில் இருப்பவர்களிடம்
என்னை எதற்கோ நிரூபிக்கத்
துணிகிறேன்.
சிலநேரம்,
எல்லாம் மறந்த உத்தம நிலையெட்டி
ஆழ்ந்த அறிவுறைக்குப்
போய்விடுகிறேன்
ஏன் என்னை சுயவிளக்கம்
செய்துக் கொண்டிருக்கிறேன் ..
செய்யவேண்டாமெனச் சொல்பவைகளை
உன்னிடமே
செய்துக் கொண்டிருக்கிறேன்
எல்லாவிதத்திலும்
என்னை ஏற்கிறாய் என்றாகி இருக்கலாம்
சரிகளுக்கும் தவறுகளுக்கும்
குழப்பங்களுக்கும்
அறிவுறைகளுக்கும் ..
அப்பாற்பட்டு நீ இருக்கிறாய்
இதத்தனையும் தாண்டி ஆக்ரமிக்கிறாய்
நீயா, உன் அருகாமையா..
எனக்குப் பிடித்த நரவாசனையை
உன்னிடம் இல்லாமல்
தின்றுவிட்டுக்
கடந்துவிடலாம் தோன்றுதலுக்கு மிகுந்து
சதை வளர்க்கிறாய்
உன் போக அடிமையாக இருக்க
விருப்பமில்லை
இறந்து போயிருக்கலாம்தானே
நீயோ நானோ,
என்றால்
நிறைய காதலோ,
அதனினும் மிஞ்சிய பலமுகக் காமமோ
என் முன் தோன்றல்களாய்
இருந்திருக்கலாம்தானே
சிலது யாருக்கோ வேண்டி,
சிலது வெறும் ஏமாத்து,
சிலது கடமை நிர்வகிக்கல் போல்,
சிலது ப்ராந்தமாய்,
சிலது வேகம் சலிக்கும்,
சிலது மரணம்வரை எதிர்ப்பார்க்கும்
சிலது வன்மையாய் காண்பிக்கும்
உன்னைப்போல..
அது ரதி என்றாலும் ப்ரியமே என்றாலும்..
உள்ளுக்குள்
ஒரு காவியாத்மகம் போல்
ஊர்கிறாய்.
பறிபூரணதையில் கத்தி ஜொலிக்கும்போதும்
கவித் தன்மை கெடாமல்
பார்த்துக் கொள்கிறாய்.
பிரிந்த திரியில்,
ஒட்டி எரியும்
நிமிர்ந்த நீல ஜுவாலைப் போல்.
காலங்கள் தாண்டி
ஒருமுறையா இருமுறையா
சந்தித்தோம்
உன் கண்களின் ஜாலங்களுக்குள்
என்னை இணைத்திருக்கும்
ஒரு நிமிர்ந்த ஜுவாலைக்
காண்கிறேன்..
இதுப் பொய்யா நிஜமா ..
என் விரல்களின் வேகம்
உன் மீட்டுதலில் இன்னும் குறையாமலிருக்கு
என்னும்போது
நீ
ரிஷ்யசிங்கனை வேட்கைச் செய்யும்
அதே நாட்டியக் காரிதான்
#சைதன்யா