வான் உலா

வான் உலா

முளைத்த சிறகை பள்ளத்தில் அடித்து
மூன்று நொடிகள் அப்படியே சுற்றி
ஜிவ்வென்று எழுகிறேன்..
உயர... உயர... உயரே..

உல்லாசமாய்.. உற்சாகமாய்...
சிந்தனைத் தானியங்களைக் கொறித்து தின்கிறேன்..
தூவுகிறேன்...
கருந்துளைகளில் சிக்காது தப்புகிறேன்...
வாரே.. வாரே... வா.. வா... வா..!

பிராந்தியம் விட்டுப் பிராந்தியம் காண்கிறேன்...
புவி உருண்டையின் சுற்றுக்கேற்ப சுற்றுகிறேன்..
தொலைவு பூஜ்ஜியமாகிறது...
லலல்லா... லலல்லா... லலல்லே...

தனியாய்.. தன்னந்தனியாய்..
தனிமை உறைக்காத தனியாய்..
சிர்ப்ப்.. சிர்ப்ப்... சிர்ப்ப்...!

சமயங்களில்
வானத்தில் உலவுவது போலவே இருக்கிறது
இணையத்தில் உலவுவது...!

எழுதியவர் : அருணை ஜெயசீலி (14-Jun-19, 11:55 am)
Tanglish : vaan ulaa
பார்வை : 156

மேலே