புகழ் பெற்ற அமெரிக்கக் கவிஞர் ராபர்ட் ஃப்ரோஸ்ட் எழுதிய கவிதைகளில் ‘ஸ்டாப்பிங் பை உட்ஸ் ஆன் எ ஸ்னோயி ஈவினிங்’ Stopping by woods on a snowy evening என்ற கவிதை மறைந்த இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் மிக விருப்பமான கவிதை
சென்ற நூற்றாண்டின் மிகவும் புகழ் பெற்ற அமெரிக்கக் கவிஞர் ராபர்ட் ஃப்ரோஸ்ட் எழுதிய கவிதைகளைப் பாராட்டுபவர் உலகில் பலரும் உள்ளனர். ராபர்ட் ஃப்ரோஸ்ட் எழுதிய கவிதைகளில் ‘ஸ்டாப்பிங் பை உட்ஸ் ஆன் எ ஸ்னோயி ஈவினிங்’ (Stopping by woods on a snowy evening) என்ற கவிதை மறைந்த இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் மிக விருப்பமான கவிதை. அக்கவிதையில் ‘வாழ்வு இனிமையானது, வாழ்வில் ஓயும் முன்னர் நிறைவேற்ற எனக்குக் கடமைகள் பல உள்ளன’ என்ற பொருள் கொண்ட, வாழ்க்கையைப் பயணத்துடன் உருவகப்படுத்தும் கீழ் காணும் வரிகளை அவர் மிகவும் விரும்பினார்.
“The woods are lovely, dark and deep.
But I have promises to keep.
And miles to go before I sleep.
And miles to go before I sleep.”
(- Stopping by woods on a snowy evening)
-----------------------------------------------------
சிறகு