விண்ணையே தொடட்டுமே
விண்ணையே தொடட்டும் உம் புகழ்
திக்கெல்லாம் ஒலிக்கட்டும் உம் பெயர்
நெஞ்சமெல்லாம் நிலைக்கட்டும் 
உம் செயல்கள்
என்றும் குன்றாது அச்சிகரம்
என்றும் நீங்காது அப்பெயர்
கன்னங்கள் சிவக்க சிவக்க 
வயிறு குலுங்க குலுங்க
புன்னகை அணிவித்தாயே
இன்று  துயர் அணிவித்து 
நீ செல்கின்றாயே
ஓயாது உழைத்திட்ட நீ 
இன்றும் என்றும் ஓயமாட்டாயே
ஓங்குமே உம் புகழ் ஓங்குமே
சிரிக்க சிரிக்க வந்த கண்ணீரோடு 
அழுது அழுது ததும்புகிறதே இன்று
மீண்டும் வாராயோ 
வந்து துயர் நீக்கி செல்வாயோ
புன்னகை பூத்துக்குலுங்கிடத்தான் வாராயோ
தோழனே
 
                    

 
                             
                            