முப்பொழுதும் காதல்
எங்கே கண்மணி நீ இருக்க
உயிரும் உன்ன தேடி நாள் வதைக்க
சம்பவமாக நீ வரனும் சத்தியமா?
சம்மதமாக நீ வளையனும் பத்திரமா?
கண்ட காதல் யாவும்
கானும் காதல் யாவும்
கட்டிவைச்ச காதலும்
கட்டிடமா உனக்கே கட்டிடமா..
கேட்டுவச்ச நாட்களும்
தேக்கிவச்ச நேசமும்
கோடுபோட்ட இதயமும்
கோத்திரமா உனக்கான கோத்திரமா?
கொண்டாட்டம் உயிர் பந்தாட்டம்
நெஞ்ஜோரம் அவள் மின்னோட்டம்
கள்ளாட்டம் அவள் கண்ணோட்டம்
மர்மமான அன்பே சூதாட்டம்
உத்தரவாதம் நான் தாறேன்
பத்திரமா...
என் உயிறே உன்னில் எழுதிவச்சேன் ஆதனமா...
கற்பனை கடலே நீயும்
மிதவை யாக நானும்
உன்னில் கரைசேறுவேனா?
உன்னில் மடிவேனா?