முதுமை
முதுமை🙏🏽
அனுபவத்தின் அடையாளம்.
பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்.
அன்புக்கு ஏங்கும் நிறைகுடம்.
மூன்றாவது கால்
உதவியுடன் நடக்கும் மானுடம்.
பார்வையில் மட்டு,
நினைவில் மறதி,
சொல்லில் தீர்க்கதரிசி,
எதற்கும் அஞ்சாது உள்ள உறுதி.
பாத்திரம் அறிந்து பிச்சையிடும்.
சேமிப்பை வலியுறுத்தும்.
நெஞ்சம் நிமிர்ந்தி
பழைய பெருமை பேசும்.
மழலையை விரும்பும்.
இனிப்புக்கு ஆசைப்படும் .
மனதார வாழ்த்தும் நெஞ்சம் .
நோயயை பொருட்படுத்தாது.
மரணத்துக்கு அஞ்சாது.
பாசத்தில் மயங்கி
பெற்ற பிள்ளைகளை
கடைசி வரை நம்பும்.
யாரிடமும் விட்டு தராது .
- பாலு.