நீ பார்க்காத வேளையில்

நீ பார்க்கும் போது உன் விழிகளை நோக்க ஏனோ மனம் தள்ளாடுகிறது ...........
உன்னைப் பார்க்கும் போது மட்டும் ஓயாமல் அடிக்கும்
அலைகடல் என மனம்!
ஆனால் வார்த்தைகள் மட்டும் சிறைக்குள் அடைபட்ட எலியாய் வெளியில் வர முடியாமல் தடுமாறுதே !!!!
பேச வாயெடுத்தால் சிக்கிக்கொள்ளும் வார்த்தைகள் .......
நீ என்னை நோக்கினால் நான் விண்ணையும் மண்ணையும் நோக்குகிறேன்.....
தட்டுத் தடுமாறுகிறதே என் இதயம்!!!
ஆனால் உன்னை தூரத்தில் நின்று ரசிக்கத்தான் மனம் ஏங்குகிறது..... எது எப்படி இருந்தாலும் நீ அருகில் இருக்கும் போது உன்னை பார்க்க தவிக்கும் என் மனம்!
நீ எங்கோ இருக்கும் போது உன்னை மட்டுமே சுவாசிக்கிறதே !
ஆம்!!
எனக்கு கிடைத்த இதயம் உன்னை அதிகமாக நேசிக்கின்றது நீ பார்க்காத வேளையில்!

எழுதியவர் : நீர் (8-Jul-19, 6:17 am)
சேர்த்தது : நீர்
பார்வை : 322

மேலே