காமராஜர்
கல்விக்கு உயிர்கொடுத்தாய்
பள்ளிக்கு வழிவகுத்தாய்
யாருக்கும் கருமம் நினைக்காதே கர்ம வீரரே
உங்களைப்போலவே உங்கள் எண்ணமும் உயரம்தான்
குழந்தைபோல் மனம்கொண்டதால்
பள்ளி குழந்தைகளின் பசியை தீர்த்தாயோ
சுயநலம் இல்லாத
பொதுநல தலைவரே
நான் என நினைக்காமல்
நாம் என நினைத்தீர்கள்
தோல்விகளை எதிர்கொள்
திறமைகள் பிறக்கும் என்றுச்சொன்னாய்
வேளாண்மை வளர்வதற்கு
நீயே பேராண்மை செய்தவன்
எளிமையான வாழ்வில்தான் இனிமை இருக்கின்றது என்பதற்கு
நீயே வரலாறு
பள்ளி படிப்பை நீங்கள் தொடரமுடியாவிட்டாலும்
பலபேர் கல்வி தொடர்வதற்கு நீங்கள் தொடர்ச்சியாக இருந்தீர்கள்
கல்வி இருக்கும்வரை
காமராஜர் என்ற புத்தகம் மூடப்படாது
BY ABCK